ஜப்பானைச் சேர்ந்த டெட்சுயா என்ற 84 வயது தாத்தா, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறார். விதவிதமான ஃபேஷன் உடைகளில் அவரது புகைப்படங்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஃபேஷன் உடைகளில் இளமை மிடுக்கோடும், அழகோடும், அவரது ஆர்வத்தைப் பார்க்கும்போது 84 வயது தாத்தா என்பதை நம்பவே முடியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர் ரசிகர்கள்!