பா.இரஞ்சித்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி இரஞ்சித் மனுதாக்கல் செய்திருந்தார். ஜாமீன் தர அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தடையை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.