நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு `பிகில்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இரண்டு கேரக்டர்களுடன் வெளியாகியுள்ள விஜய்யின் போஸ் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க அட்லீ இயக்கி வருகிறார்.