நடிகர் சங்கத் தேர்தலை திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தினாலும் வாக்குகளை எண்ணாமல் பதிவான வாக்குகளை தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் எனவும் விஷாலின் மேல்முறையீட்டு மனுவில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.