தென்கொரியா நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியாவுக்கான தனது முதல் எஸ்யூவியை வெளியிட்டுள்ளது. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிப்படுத்தப்பட்ட SP2i கான்செப்ட் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு இந்த மிட்சைஸ் எஸ்யூவியான செல்ட்டோஸ் காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.