ஜப்பானில் கடந்த மாதம் சுமார் 25 புல்லட் ரட்யில்களின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் 12,000 பயணிகள் வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். முதலில் மின்சாரங்கள் தடை பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மைக் காரணம் தெரியவந்துள்ளது. எலெக்ட்ரானிக் கருவியில் நத்தை சிக்கியதால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.