நடராஜருக்கு சிறப்பு மிக்க தலமாகக் கருதப்படுவது சிதம்பரம். உலகப் பிரசித்திபெற்ற இந்தத் திருக்கோயிலில், பத்து நாள்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா, வரும்  29 - ம் தேதி தொடங்க உள்ளது. ஆனித் திருமஞ்சனத்தின்போது நடராஜருக்கு செய்யப்படும் மகா அபிஷேகத்தைக் கண்டால் அளவற்ற பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.