காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் உள்ள அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்துக்கு வைப்பார்கள். இந்த வருடம் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு திருமஞ்சனம் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளார். ஜூலை 1-ம் தேதியிலிருந்து 48 நாள்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.