இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரியா செராரோ, 2019-ம் ஆண்டின் 'மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியா' பட்டத்தை வென்றிருக்கிறார். இவர், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 'பிரபஞ்ச அழகிப் போட்டியில்', ஆஸ்திரேலியா சார்பாகப் பங்குபெறப்போகிறார். 26 வயதான பிரியா, கர்நாடகாவில் பிறந்தவர்.  11 வது வயதில் ஆஸ்திரிலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.