பட்ஜெட் செக்மெண்டில் அடுத்ததாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிட முடிவு செய்துள்ளது ஷியோமி நிறுவனம். Redmi 7A எனப் பெயரிடப்படுள்ள இந்த ஸ்மார்ட்போன் வரும் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கெனவே சீனாவில் கடந்த மாதம் வெளியான இந்த மொபைல் இந்தியாவில் வெளியாகும்போது கூடுதல் அப்டேட்களுடன் வெளியாகும் எனத் தெரிகிறது.