உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு நேற்றையப் போட்டி, கடைசி போட்டி. இப்போட்டியுடன் ஒருநாள் போட்டியில் விடைபெற்றார் மாலிக். இதுவரை 287 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7534 ரன்கள் எடுத்திருக்கிறார். `அதிகம் நேசிக்கும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது வருத்தமான முடிவுதான்’ என்றார் அவர்.