'மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம், 'ஆடை'. அமலா பால் லீட் ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பாலிவுட்டின் இயக்குநரான அனுராக் காஷ்யப் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.