பெல்லி என்ற இன்ஸ்டகிராம் பிரபலம், தன் ஃபாலோயர்களிடம் தான் குளித்த நீரை பாட்டிலில் அடைத்து 30 டாலருக்கு விற்கப்போவதாக அறிவித்தார். “இது என்ன லூஸுத்தனமான ஐடியா” என ஒருபக்கம் விமர்சனம் வந்தாலும் மற்ற மூன்று பக்கங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிந்தன. மூன்றே நாளில் மொத்த பாட்டில்களும் விற்றுத் தீர்ந்தன.