நடப்பு 2019-20-ம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டைப் பார்த்து மாதச் சம்பளதாரர்கள் ஏமாற்றமடைந்தது என்னவோ உண்மைதான். மாதச் சம்பளக்காரர்களின் அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும்என்கிற எதிர்பார்ப்புகள் பரவலாக இருந்தன. ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை.