10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்துவருகிறது. அந்த விழாவில் 46,000 தனித் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட நூலை,தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட, முதல் பிரதியை வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தலைவர் சுந்தர் குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் போன்ற பலர் பெற்றுக்கொண்டனர்.