சிதம்பரம் நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்று, மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனப் பெருவிழா. மற்றொன்று, ஆனித் திருமஞ்சனத் திருவிழா. இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சன பிரம்மோற்சவம் கடந்த 29 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.