நாசா அனுப்பி வைத்த கியூரியாசிட்டி என்ற ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்துவருகிறது. அப்படி செவ்வாய்க் கிரகத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் பறவை போன்ற ஒன்று பறப்பது பதிவாகியுள்ளதாகச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் வேற்றுக் கிரகவாசி ஆய்வாளரான ஸ்காட் சி வாரிங்.