கர்நாடகா மாநிலம் ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து மும்பையில் தங்கியுள்ளனர். இன்று அவர்களைச் சந்திக்க முதல்வர் குமாரசாமி செல்வதாக கூறப்பட்ட நிலையில், அவரைச் சந்திக்க விருப்பமில்லை, எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ-க்கள் போலீஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.