‘இது மிகவும் கடினமான ஒன்றே. 45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் தொடரிலிருந்து இப்போது வெளியேறி இருக்கிறோம். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் நாக் அவுட் போட்டிகள் என்று வந்துவிட்டால் எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். அதற்கேற்ப நியூஸிலாந்து திட்டமிட்டு விளையாடியது’ என இந்திய கேப்டன் விரட் கோலி பேசியுள்ளார்.