நேற்றைய ஆட்டத்தின்போது தோனி அவுட் ஆகும்போது 6 ஃபீல்டர்கள் விதிமுறைகளை மீறி எல்லையில் இருந்தனர் என்ற தகவல் வெளியானது. ஆனால் திரையில் காண்பிக்கப்பட்ட காட்சியில் தவறு இருந்ததாகத் தெரிகிறது. ஒருவேளை 6 ஃபீல்டர்கள் இருந்து அதனை நடுவர் கவனித்திருந்தாலும், அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். அப்போதும் தோனி அவுட் தான்!