தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். தி.மு.க மீதான அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவரின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.