அறிமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம், 'ஜீவி'. மிகக் குறைவான பட்ஜெட்டில் த்ரில்லர் கதையை,  கொஞ்சம் அமானுஷ்யம் கலந்து சொல்லி அசரடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷாலை இயக்கவிருக்கிறார், வி.ஜே.கோபிநாத்.