ஒன்பது தொகுதிகளின் தோல்வி குறித்து ஆராய எட்டுப் பேர் கொண்ட குழுவை, கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி திமுக அறிவித்தது. அக்குழு அறிக்கையை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒப்படைத்துள்ளது. ஒன்பது தொகுதிகளிலும் தி.மு.க-வினர் செய்த சில குளறுபடிகளே தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.