சீனா, குவாங்டாங் மாகாணத்தில், கடை திறப்பு விழா ஒன்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல நடிகர் சிமோன் யாம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சில் மேடையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் மேடைக்கு வந்து கத்தியால் திடீரென சிமோனைக் குத்தத் தொடங்கியிருக்கிறார். இதில், கை மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது.