கடந்த ஜனவரியில், இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் காந்தி நகர், அகமதாபாத் மற்றும் கட்ச் பகுதிகளில் அமுல் நிறுவனம் ஒட்டகப் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனையைத் தொடங்கியது. புதிதாக 200 மி.லி ஒட்டகப் பால் பாட்டில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விலை 25 ரூபாய். ஏற்கெனவே பதப்படுத்தப்பட்டிருப்பதால், இப்பாலை அப்படியே குடிக்கலாம்.