சயனக் கோலத்தின் கடைசி நாள் இன்று என்பதால் காலையிலிருந்தே பக்தர்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 45 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் தோன்ற உள்ளதால் அதிகளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.