சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது ஸ்ரீ தேவிகருமாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.  ஒவ்வோர் ஆண்டும் அம்மனுக்கு ஒரு லட்சத்தி எட்டாயிரம் வளையல்கள் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இந்த ஆண்டு வரும் 4 -ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப் படவிருக்கிறது.