ஒருவரின் சிரிப்பு உண்மையானதா போலியானதா என்பதைக் கண்டறியும் மென்பொருளை இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த மென்பொருள் ஒரு நபரின் வாய், கன்னம், கண்கள் ஆகிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள், அசைவுகளை வைத்து அது உண்மையானதா போலியானதா என்று கண்டறியும்.