அத்தி வரதர் கையில் இருக்கும் ‘மாசுச' என்பது வடமொழிச் சொல்லாகும்.`மாசுச' என்றால் ‘எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன்’ என்று அர்த்தம். பகவத் கீதையில் கிருஷ்ணர், அர்ச்சுனனிடம் கடைசியில் ‘மாசுசஹா’ என்று சொல்லியிருப்பார். `மாசுசஹா' என்பதைத்தான் `மாசுச’ என்று சுருக்கியுள்ளனர்.