சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம், பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாகக் கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக். இது விரைவில் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.