ஐரோப்பா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய வெப்ப அலை அடுத்ததாகத் தாக்கிய இடம் கிரீன்லாந்து. அதன் காரணமாகவே பனிப்படலங்கள் உருகுவது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் கடந்த புதன்கிழமையன்று ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டன் அளவுக்கு பனிப்படலங்கள் உருகியிருக்கின்றன. இதை இயற்கையின் எச்சரிக்கை மணி எனக் கூறுகிறார்கள்.