'பாலின சமத்துவம் இல்லாத இந்திய மீடியா' என்கிற தலைப்பில் ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் முன்னணி 7 இந்திப் பத்திரிகைகள், 6 ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரு பெண்கூட தலைமைப் பதவியில் இல்லை என்றும் ஃபேஷன் போன்ற எளிதான விஷயங்களைச் செய்தியாக்கும் பணியே அதிகம் தரப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.