சிவத்தலங்களில் மிகவும் முக்கியமானது திருநாட்டியத்தான்குடி. இங்குதான் கோட்புலிநாயனார் வேளாண்மரபில் அவதரித்தார். இந்தத் தலத்தில் ஈசன் உமையம்மையோடு விவசாயியாக மாறி வயலில் நாற்றுநட்டார். இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆடிக் கேட்டை நடவு உற்சவமும் கோட்புலிநாயனாரின் குருபூஜை நிகழ்வு விழாவும் இன்று தொடங்கவிருக்கிறது.