இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் பொல்லார்ட் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டுள்ளது.