அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் இரவு பகலாக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தூங்கா நகரமாக  காஞ்சிபுரம் மாறியுள்ளது. இன்னும் 10 நாள்களே எஞ்சியுள்ள நிலையில் இதைவிட அதிக கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடைசி நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை, வி.ஐ.பி, வி.வி.ஐ.பி, தரிசனம் ரத்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.