மதுரை அழகர்கோயில் ஆடி பிரம்மோற்சவப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 15, ஆடிப் பவுர்ணமியன்று தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.  சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக நடைபெறும் பெரிய திருவிழாவாக இந்த ஆடி பிரம்மோற்சவப் பெருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.