இந்தியா உடனான தூதரக உறவு, வர்த்தக உறவை முடித்துக்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்பதாக பேசியதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.