புத்தம் புதிய கிராண்ட் i10 காருக்கான காத்திருப்பு, ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் 20–ம் தேதி உலகளவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஹேட்ச்பேக், இந்தியாவில் அன்றே விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் மூன்றாம் தலைமுறை i10 மாடலாக, கிராண்ட் i10 நியோஸ் (Nios) காரின் படங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய்.