நேற்று, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான விஜய் சங்கர், பெளலிங் செய்த முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். முன்னதாக, தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில், முதல் பந்திலேயே பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மொத்தம் விஜய் சங்கர், 2 விக்கெட்டுகள் எடுத்தார்.