`பாகுபலி-2' படத்தைத் தொடர்ந்து, நடிகர் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படமான `சாஹோ', பிரமாண்ட பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுவருகிறது. இதில், ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பரபர காட்சிகள், பின்னணி இசை என டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.