செவ்வாயில் உயிர்ப்போடு இருக்கும் இரண்டு ரோவர்களில் நாசாவின்  கியூரியாசிட்டியும் ஒன்றாக இருக்கிறது. யாருமே இல்லாத அந்தக் கிரகத்தில் பயணம் செய்து 7 வருடமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஏழு வருடத்தில் செவ்வாயின் தரைப்பகுதியில் சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவை கியூரியாசிட்டி கடந்திருக்கிறது.