ஊட்டியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட ஸ்டாலின், `நீலகிரி மக்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்த நான், உடனடியாக அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என புறப்பட்டேன். இந்தச் செய்தியை அறிந்தவுடன், ஆளுங்கட்சியினர் ஒரு அமைச்சரை அனுப்பி, பெயரளவிற்கு சில முகாம்களைப் பார்வையிட்டும் நிவாரணம் வழங்கியும் சென்றுள்ளார்’ என்றார்.