போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், `போக்குவரத்துத் துறையில் 825 மின்சாரப் பேருந்துகளை முதற்கட்டமாக தமிழகத்தில் இயக்க உள்ளோம். அதில், சென்னையில் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அடுத்து படிப்படியாக 2,000 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்' என்றார்.