புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், விமான நிலையம் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு முதலுதவி செய்து தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.