``பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் போதாது, ரெக்கார்டை முறியடித்து சாதனையும் படைக்க வேண்டும்'' என்று நெல்லையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை அருண்மொழி, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். புழுதிபறக்க மைதானத்தில் ஈட்டியையும், இரும்புக் குண்டையும் வீசி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.