`கே.ஜி.எஃப் 2' படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். தவிர, `வடசென்னை', `சகா' உள்ளிட்ட படங்களில் நடித்த சரண் இந்தப் படத்தில் தற்போது இணைந்துள்ளார். `வடசென்னை' படத்தில் தனுஷின் மைத்துனராக இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.