நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ``உங்களுக்காகத்தான் நான் வந்துள்ளேன். சீக்கிரம் நல்ல நிலைமை வரும் பொறுங்கள். சென்னை சென்றதும் உங்களுக்காகப் பேசுவேன்'' என்றார். பின்னர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.