சத்தீஸ்கர் அரசு தமது மாநிலத்தின் நெல் விவசாயிகளுக்குக் குவிண்டாலுக்கு 750 ரூபாய் ஊக்கத்தொகை கொடுத்து சாதனை படைத்துள்ளது. இதற்காகச் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஸ் போகலுக்குப் பாராட்டு தெரிவித்து, தஞ்சாவூர் விவசாயிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.