`காசு இருந்தா போதும். தேர்வே எழுதாம பட்டம் வாங்கிடலாம்..’ - இப்படி ஒரு பேச்சு, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அலையடிக்கிறது. காரணம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்ககத்தில், 500-க்கும் மேற்பட்டோருக்கு மோசடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.