தமிழகத்தில் ஒரு மெகாவாட் சோலார் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு, 4 கோடி ரூபாய் செலவாகிறது. இதற்கு  சுமார் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இதே செலவுகளுக்கு மகாராஷ்டிரத்தில் ஐந்து லட்சம் ரூபாய்தான் ஆகும். இந்தத் துறையில் நிலவும் ஊழல்தான் அதன் முன்னேற்றத்துக்கும் தடை’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்!